முதல்வர் பதவிக்காக ஐ.தே.கவின் மூன்று எம்.பிக்கள் பதவி துறப்பு! மே 31 இற்குள் தேர்தல்!

அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை வரும் மே 31ஆம் திகதிக்கு முன்னதாக, நடத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்துள்ளார்.

நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அமைச்சரவைப் பத்திரம் ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இதன்படி, அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல் ஒரே நாளில் நடத்தப்படும்.

ஏற்கனவே இருந்த, விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறைப்படியே இந்த தேர்தல் நடைபெறும்.

வேட்புமனுக்களில் பெண்களுக்கு 25 வீத பிரதிநிதித்துவத்தை  உறுதிப்படுத்த வேண்டும் என்றும் சிறிலங்கா அதிபரின்  அமைச்சரவைப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அமைச்சரவைப் பத்திரம் கலந்துரையாடப்பட்டு, முடிவு எடுக்கப்படும்.

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 6 மாகாண சபைகளின் பதவிக்காலம் ஏற்கனவே முடிந்து விட்ட நிலையிலும், தென், மேல் மாகாண சபைகளின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்திலும், ஊவா மாகாண சபையின் பதவிக்காலம், ஒக்ரோபர் மாதமும் முடிவடையவுள்ள நிலையிலேயே-  ஒரே நாளில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தும் யோசனையை ஜனாதிபதி முன்வைத்துள்ளார்.

அதேவேளை, மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அதாவது, மூன்று மாகாணசபைகளில் முதல்வர் வேட்பாளராகக் களமிறங்குவதற்காக ஐ.தே.கவின் மூன்று எம்.பிக்கள் விரைவில் பதவி விலகவுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *