வெளிநாட்டுக்கு தொழிலுக்கு செல்லவிருப்பவர்களா நீங்கள்? அழையுங்கள் 1989

பாதுகாப்பான வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களைப் பெற்றுச் செல்லுதல் தொடர்பான தேசிய ஊடக பிரசார நடவடிக்கை, தொலைத்தொடர்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இது, விளையாட்டுத்துறை அமைச்சின் டங்கன் வைற் கேட்போர் கூடத்தில் 2019 ஜனவரி 28 ஆம் திகதி ஆரம்பமானது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதரகம் என்பனவற்றின் ஒத்துழைப்புடன் இடம்பெறும் இந்தத் திட்டம்,

தகவல்களை அறிந்து தீர்மானங்களை மேற்கொள்ள சகல பிரசைகளுக்கும் ஊக்கமளிக்கிறது. வெளிநாடுகளில் தொழில்களுக்காகச் செல்லும் போது, சரியான நடைமுறைகளைப் பின்பற்றி, முறையான வழிகாட்டல்கள் மூலம், நம்பகமான முறையில் செல்ல வேண்டும்.

இதற்கென, பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் பிரதேச செயலகங்களின் உதவியுடன் ளுடுடீகுநு அலுவலகங்களையும்,

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி அதிகாரிகளையும் ‘1989’ என்ற துரித தொலைபேசி அழைப்பு இலக்கத்தின் ஊடாக முன்னெடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் தொலைத்தொடர்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்  ஹரீன் பெர்னாண்டோ, இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவர்  ஹான்ஸ்பீட்டர் மொக் ஆகியோருடன் உரிய நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கையர்கள் வெளிநாட்டுத் தொழில்களுக்காகச் செல்லும் போது, அவர்களுக்குத் தேவையான, நம்பகமான தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள் காணப்படாமை, சரியான தீர்மானங்களை மேற்கொள்வதை தடுக்கும் ஒரு பிரதான குறைபாடாகக் காணப்படுகின்றன.

இலகுவில் பெற்றுக்கொள்ளக்கூடிய நம்பகமான தகவல்கள் கிடைக்கப் பெறுமானால், சிறந்த தீர்மானங்களை மேற்கொண்டு, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்காக செல்ல முடியும்.

இது காணப்படாமையினால் பல்வேறு தனிப்பட்ட மற்றும் சமூகச் சிக்கல்களை இந்த பணியாளர்களும் அவர்களது குடும்பங்களும் எதிர்நோக்கி வருகின்றனர்.

விசேடமாக, குறைந்த திறன்கள் பிரிவில் அதிகளவு இலங்கை பிரசைகள் முறையான தகவல்கள் இல்லாமையினால் காணப்படும் கடப்பாடுகளை அறியாது தனது சொந்த மற்றும் குடும்ப நலன்களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.

இவர்கள் தமது உரிமைகள் மற்றும் குடும்பத்தின் உரிமைகளை அதிகளவில் இழந்து செயற்படும் நிலைமையை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த விழிப்புணர்வு வேலைத் திட்டம், மக்களிடையே தெளிவுபடுத்தலை ஏற்படுத்தி, வெளிநாடு செல்லக்கூடிய பணியாளர்களுக்கு சிறந்த வழிகாட்டல்களை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

மேலும், இதன் மூலம் ஆலோசனைகளையும், உதவிகளையும் பெற்றுக்கொடுத்து அவர்களுக்கும், நாட்டிற்கும் பாதுகாப்பான, வெற்றிகரமானதொரு எதிர்காலத்தை உருவாக்கி, விசேடமாக, தொழில் திறமைகள் மற்றும்

திறன்களை அபிவிருத்தி செய்து, தகைமைகளை அதிகரித்து, சிறந்த தொழில்களுக்கு அதிக வருமானம் பெற்றுக்கொள்ளும் வகையில் நல்ல வேலைச் சூழலில் வேலை பெற்றுக்கொள்வதுடன் நீண்டகால முதலீட்டுடன் திட்டங்களை மேற்கொள்ளவும் வழிவகுக்கும்.

சுமார் இரண்டு மில்லியன் இலங்கையர்கள் தற்போது வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். இது நாட்டின் மொத்த சனத்தொகையில் 10மூ ஆகும்.

வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் பெரும்பாலும் குறைந்த திறமைகளைக் கொண்ட கட்டட நிர்மாணத்துறை மற்றும் வீட்டுப் பணியாளர்களாக மத்திய கிழக்கு நாடுகளில் பணி புரிந்து வருகின்றனர்.

இவர்கள் அதிகளவு பாதிப்புக்களுக்கும் கஷ்டங்களுக்கும் முகம் கொடுக்க நேரிடுகின்றனர். இலங்கையின் அதிகூடிய வெளிநாட்டு நாணய சம்பாத்தியத்தைப் பெறும் துறையாக வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்புதல் அமைகிறது.

விசேடமாக இவ்வாறு வெளிநாடுகளில் பணி புரிவோர் இந்தப் பணத்தை அனுப்பி வைக்கின்றனர். இது, நாட்டின் மொத்த தேசிய உற்பத்திக்கு 8.5மூ பங்களிப்பை பெற்றுக் கொடுக்கிறது.

தேசிய மட்ட ஊடக பிரசார நடவடிக்கை மூலம் தொலைத்தொடர்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு,

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் இலங்கைக்கான சுவிற்சர்லாந்தின் தூதரகம் என்பன தகவல்களை அறிந்து கொள்ளாது வெளிநாட்டு வேலைகளுக்காக செல்லும்

அல்லது செல்ல எதிர்பார்க்கும் இலங்கையர்கள் வெளிநாடுகளில் எதிர்நோக்கக்கூடிய இன்னல்களை இல்லாதொழிக்க எதிர்பார்க்கின்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *