346 அங்கத்தவர்கள் – உலகிலேயே மிகப்பெரிய குடும்பம் இது!

உலகிலேயே மிகப் பெரிய குடும்பம் உக்ரைன் நாட்டில் இருக்கிறது.டோப்ரஸ்லாவ் கிராமத்தில் வசிக்கும் 87 வயது பாவெல் செமன்யுக் குடும்பம்தான் இந்தப் பெருமைக்குரியது.

இவருக்கு 13 குழந்தைகள். 127 பேரன், பேத்திகள். 203 கொள்ளுப் பேரன், பேத்திகள். 3 எள்ளுப் பேரன், பேத்திகள் என மொத்தம் 346 பேர் இந்தக் குடும்பத்தில் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
“எங்கள் குழந்தைகள், பேரன், பேத்திகள்வரை பெயர்களை நினைவில் வைத்திருக்கிறேன். மற்றவர்களின் பெயர்கள் நினைவில் இருப்பதில்லை. நாங்கள் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருக்கிறோம்.
எங்கள் குடும்பம் பெருகப் பெருக, இந்தக் கிராமத்திலேயே வீடுகளைக் கட்டி விடுவோம். பிறந்தநாள், திருமண நாள் போன்ற நிகழ்ச்சிகளில் குடும்பத்தினர் ஒன்று கூடிவிடுவோம்.
பெரிய பெரிய பாத்திரங்களில் உணவுகள் தயார் செய்ய வேண்டியிருக்கும். கிட்டத்தட்ட ஆண்டு முழுவதுமே கொண்டாட்டமாகத்தான் இருக்கும்.
எங்கள் குடும்பத்திலிருந்து மட்டும் 30 குழந்தைகள் பள்ளிக்குச் செல்கிறார்கள். இவர்களுக்கே ஒரு பேருந்து தேவைப்படுகிறது. சமீபத்தில் தான் உக்ரைன் நாட்டின் மிகப் பெரிய குடும்பமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறோம்.
இப்போது கின்னஸுக்கும் விண்ணப்பித்திருக்கிறோம்” என்கிறார் பாவெல் செமன்யுக்.
தற்போது 192 பேர் அடங்கிய மிகப் பெரிய இந்தியக் குடும்பம், உலகின் மிகப் பெரிய குடும்பம் என்ற கின்னஸ் சாதனையை தக்க வைத்திருக்கிறது. நிச்சயம் பாவெல் இதை முறியடித்து விடுவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *