நவராத்திரி விழாவில் ‘சிக்கன் சமோஷா’ – உயரிய சபையில் நடந்த கொடூரம்!

யானைக் கட்சிக்காரர்களின் கோட்டை அது. தெற்கில் நடைபெற்ற பல தேர்தல்களில் மண் கவ்வியிருந்தாலும் குறித்த கோட்டை மாத்திரம் அக்கட்சிக்காரர்களின் கைநழுவிப்போகவில்லை.


அம்மணியொருவரே கோட்டையின் இளவரசியாக வலம்வருகிறார். அண்மையில்கூட இவர் ‘தங்க கக்கூஸ்’ சர்ச்சையில் சிக்கினார். அதை வைத்தே எதிரிகள் அவரை விளாசித்தள்ளினர்.


சரி அது ஒருபுறம் இருக்கட்டும். ‘தங்க லேடி’யின் கட்டுப்பாட்டின்கீழுள்ள கோட்டையில் நவராத்திரி பூஜை அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு அரசியல் புள்ளிகள் பலரும் அழைக்கப்பட்டிருந்தனர். விழிகளுக்கு இறைபக்தியளிக்கும் வகையில் கலைநிகழ்வுகளும் நடத்தப்பட்டன.

வருகைதந்தவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் ‘சிக்கன் சமோஷா’ இருந்தமையே தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ளது.

சைவ உணவு மட்டுமே வழங்கப்படவேண்டிய நிகழ்வில், எவ்வாறு அசைவ உணவு பறிமாறப்பட்டது? இதன் பின்புலம் என்னவென்று நிகழ்வில் பற்கேற்ற சிலர் தமக்குள்ளேயே புலம்பிக்கொண்டனராம்.

உணவு வாங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தவறாலேயே இப்படி நடந்ததாக தகவல் கசிந்துள்ளது. அதுமட்டுமல்ல அசைவ உணவுக்கு பெயர்போன கடையொன்றிலேயே ‘சாப்பாடு ஓடரும்’ வழங்கப்பட்டுள்ளதாம்.
எதுஎப்படியோ நிகழ்வு வெற்றிகரமாக நிறைவடைந்ததாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *