தமிழருக்குச் சொந்தமான சொத்தை அவர்களிடமே ஒப்படையுங்கள்! – வெடுக்குநாறிமலையில் நின்று அரசை வலியுறுத்தியது சி.வி.கே. குழு

வவுனியா வடக்கு வெடுக்குநாறிமலைக்கு வடக்கு மாகாணசபை அவைத் தலைவா் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் 12 மாகாண சபை உறுப்பினா்கள் குழு நேற்று நேரில் விஜயம் செய்து அங்குள்ள நிலமைகளை அவதானித்துள்ளது.

மாகாணசபை உறுப்பினா் ஜீ.ரி.லிங்கநாதனினதும், வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரரா் ஆலய நிா்வாகத்தினதும் கோரிக்கைக்கு அமைவாக மாகாண சபை உறுப்பினா்கள் குழு வெடுக்குநாறிமலைக்கு சென்றிருந்தது.

இதன்போது வெடுக்குநாறிமலை ஆலயத்தின் நிா்வாக சபைச் செயலாளரும், நெடுங்கேணிப் பிரதேச சபை உறுப்பினருமான தமிழ்ச்செல்வன் வனவளத் திணைக்களம், தொல்லியல் திணைக்களம் ஆகியவற்றால் வெடுக்குநாறிமலை மற்றும் அதனைச் சூழவுள்ள காடுகள், ஆதிலிங்கேஸ்வரரா் ஆலயம் ஆகியன பறிபோகும் அபாயத்தி ல் உள்ளமைமையையும், அவற்றைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தாா்.

இதற்கு பதிலளித்த அவைத் தலைவா் சி.வி.கே.சிவஞானம்,

“தமிழா்களின் தொன்மையான வரலாற்றுச் சான்றாதாரங்களை தன்னகத்தே கொண்ட பகுதியாக வெடுக்குநாறிமலை காணப்படுகின்றது. இது தமிழா்களுக்குச் சொந்தமான பகுதி. இங்கே வனவளத் திணைக்களம் தற்போது மக்களை அச்சுறுத்தி அடிபணிய வைப்பதற்கு முயற்சிக்கின்றது.

ஆனால், தமிழா்களுக்குச் சொந்தமான சொத்தைத் தமிழா்களிடம் ஒப்படைக்கவேண்டும். மக்கள் தொன்றுதொட்டு வெடுக்குநாறி மலையில் உள்ள ஆலயத்தில் செய்து வந்த வழிபாடுகளைச் செய்ய ஆவண செய்யவேண்டும்.

இது குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமா் ஆகியோருக்கு வடக்கு மாகாணசபை உடனடியாகவே கடிதம் எழுதவுள்ளது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *