Dialog சிம் பாவிப்பவரா நீங்கள்? அழைப்புகள் முற்றிலும் இலவசம் !

இலங்கையின் பிரதான இணைப்பு வழங்குனரான Dialog ஆசிஆட்டா பிஎல்சி முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு வரையறையற்ற டயலொக்கிலிருந்து –  டயலொக்கிற்கான (D2D) அழைப்பு நேரத்துடன் Data மற்றும் ஏனைய வலையமைப்புகளுக்கும் அழைப்பு நேரத்தினை கொண்ட பக்கேஜ்கள் உள்ளடக்கிய ‘Dialog Blaster Unlimited’ இனை அறிமுகப்படுத்தியுள்ளது.

முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு பக்கேஜ்களில் காணப்படும் வரையறையற்ற நன்மைகளை அனுபவித்திட முடிவதுடன் 13 மில்லியனுக்கும் அதிகமாக இலங்கையர்களுடன் இப்போது இணைந்திருக்கவும் முடியும்.

முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் 222 ரூபாய்க்கு 7 நாட்களுக்கு D2D வரையறையற்ற அழைப்பு நேரத்தினை பெற்றுக்கொள்ள முடியும். மேலும் சந்தையில் மிகக்குறைந்த கட்டணத்திற்கு 30 நாட்களுக்கு 777 ரூபாய்க்கு D2D வரையறையற்ற அழைப்பு நேரத்தினை பெற்றுக்கொள்ள முடியும்.

பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் தங்களின் மாதாந்த தேவைகளுக்கு அமைய 777 ரூபாய் மாதாந்த கட்டணத்திற்கு டயலொக்கிலிருந்து டயலொக்கிற்கு வரையறையற்ற அழைப்பு நேரத்தினையும், 1500 ரூபாய் மாதாந்த கட்டணத்திற்கு டயலொக்கிலிருந்து டயலொக்கிற்கு வரையறையற்ற அழைப்பு நேரத்தினையும், ஏனைய வலையமைப்புகளுக்கு 500 நிமிட அழைப்பு நேரத்தினையும் மேலும் 4GB Data  வினையும் பெற்றுக்கொள்ள முடியும் .

இந்த நிகழ்வின் போது உரையாற்றிய டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை இயக்க நிர்வாகி கலாநிதி ரெய்னர் டெய்ட்ஸ்மன்,

டயலொக் முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு விரிவான குரல் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இப்போது இலங்கையிலுள்ள அனைவரும் கவர்ச்சிகரமான மாதாந்த வாராந்த திட்டங்கள் மூலம் 13 மில்லியன் இலங்கையர்களுடன் வரையறையின்றி கதைத்து மகிழ முடியும். இலங்கையர் அனைவருக்கும் சிறந்த வலையமைப்பு மூலம் புதிய தொழில்நுட்பங்களை வழங்குவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் ‘Dialog Blaster Unlimited’  பக்கேஜினை #678#  டயல் செய்வதன் மூலம் மாற்றிக்கொள்ள முடியும். அல்லது Dialog  வாடிக்கையாளர் சேவை நிலையத்திற்கு விஜயம் செய்வதன் மூலம் புதிய இணைப்பினை பெற்றுக்கொள்ள முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *