கொடுப்பனவுகள் இன்றி திண்டாடும் மலையக உதவி ஆசிரியர்கள்!

பதுளை கல்விப் வலயத்தைச் சேர்ந்த ஆசிரிய உதவியாளர்கள் பலர், கொட்டகலை ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் பயிற்சிகளை பெற்று வருகின்ற நிலையில், அவர்களுக்கான ஆகஸ்ட் மாத ஆசிரிய உதவியாளர் கொடுப்பனவுகள் கிடைக்காமையினால்,  அவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கிய வண்ணமுள்ளனர்.


இது குறித்து உடன் நடவடிக்கைகளை மேற்கொண்டுஇ அவர்களுக்கான கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுக்குமாறுஇ பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அவசரக் கடிதமொன்றினை அனுப்பியுள்ளார்.

தொடர்ந்து அக்கடிதத்தில் “ கொட்டக்கலை ஆசிரியக் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரிய பயிற்சிகளைப் பெற்று வரும், பதுளை கல்வி வலயத்தைச் சேர்ந்த ஆசிரியர் உதவியாளர்கள், தமக்கான கடந்த ஆகஸ்ட் மாத ஆசிரிய உதவியாளர் கொடுப்பனவுகள் கிடைக்காமையினால்இ அது குறித்து அவர்கள் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாத, ஆசிரிய உதவியாளர் கொடுப்பனவுகள் குறித்த அனைத்து விபரங்களும்இ 2018ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ந் திகதி அனுப்பப்பட்டிருந்த போதிலும், அவ் விபரங்கள் தமக்கு கிடைக்கவில்லையென்றதினால், மீண்டும் அவ்விபரங்களை அதே மாதம் 28ந் திகதிஇ பதுளை கல்வி வலயத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் ஆசிரிய உதவியாளர்களுக்குரிய ஆகஸ்ட் மாத கொடுப்பனவிற்கு தேவையான நிதி வைப்பிலிடப்படவில்லையென்று, சம்மந்தப்பட்ட உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இச் செயல்பாடானது பொறுப்பற்ற செயல்பாடாகவேஇ நான் கருதுகின்றேன். குறிப்பிட்ட ஆசிரிய உதவியாளர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது. அவர்களின் வாழ்வாதாரத்திற்கு கிடைக்கும் பத்தாயிரம் ரூபாவென்ற சொற்ப நிதியையும்இ அவர்களுக்கு வழங்கப்படாததால்இ அவர்கள் பெரும் பிரச்சினை எதிர்நோக்கிய நிலையிலுள்ளனர்.

கொட்டகலை ஆசிரிய பயிற்சி கலாசாலைகளில் பயிற்சி பெற்றுவரும் இவ் ஆசிரிய உதவியாளர்கள் தமக்கான விடுதி வாடகை, உணவுச் செலவுகள் ஆகியனவற்றையும், செழுத்த முடியாத இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆகவே, இது விடயத்தில் கூடிய கவனம் செழுத்தி, நிலுவையிலுள்ள ஆகஸ்ட் மாத கொடுப்பணவுகளை வெகு விரைவில் பெற்றுக்கொடுக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன் “ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *